📅
2026-06-06
திருக்குறள் மாநாடு மற்றும் வினாவிடைப் போட்டி - மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக!
தமிழ் மொழி மற்றும் திருக்குறளின் உயரிய அறங்களை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில், அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் ஏற்பாட்டில் “திருக்குறள் மாநாடு” மட்டக்களப்பில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
திருக்குறள் மாநாட்டிலே ஆய்வரங்கம் நடைபெறும். ஆய்வரங்கு முடிவிலே கேட்கப்படும் வினாக்களுக்கு எழுத்து மூலம் விடையளிப்பவர்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெறுபவர்கள் வெற்றியாளர்களாகத் தெரிவுசெய்யப்படுவார்கள். இப்போட்டியில் க.பொ.த (உ/த) மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொள்ள முடியும்.
📅 நாள்: 28.06.2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕘 நேரம்: காலை 09.00 மணி – மாலை 04.00 மணி
📍 இடம்: சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
🏆 பரிசுகள்
🥇 முதல் பரிசு – ரூ.100,000/-
🥈 இரண்டாம் பரிசு – ரூ.50,000/-
🥉 மூன்றாம் பரிசு – ரூ.25,000/-
மேலும், தெரிவு செய்யப்படும் 10 பேருக்கு தலா ரூ.5,000/- பரிசுத்தொகையும் வழங்கப்படும். முதலில் பதிவுசெய்யும் 500 பேர் மாத்திரமே இப்போட்டி நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழுள்ள QR குறியீட்டை பயன்படுத்தி அல்லது www.akthuthiru.lk இணையதளத்தின் மூலமாகவோ தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
திருக்குறளின் அறவழியை உலகளாவிய அளவில் பரப்பும் இந்த சிறப்புமிக்க நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்துமாறு அன்புடன் அழைக்கின்றோம்.