📅
2026-05-11
திருக்குறள் மாநாட்டை முன்னிட்டு இளைஞர்களுக்கான குறும்படப் போட்டி
2026ஆம் ஆண்டு மட்டக்களப்பில் நடைபெறவுள்ள “அகண்ட தமிழ் உலகம் திருக்குறள் மாநாடு” முன்னிட்டு இளைஞர்களுக்கான சிறப்பு குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. “உலகளாவிய அறப்பாதைக்கு வள்ளுவம் காட்டும் வாழ்க்கை” என்ற கருப்பொருளில் நடைபெறும் இப்போட்டி, திருக்குறளின் அறம், பொருள், இன்பம் ஆகிய வாழ்வியல் கருத்துகளை படைப்பாற்றலுடன் வெளிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
போட்டிக்கான குறும்பட தலைப்புகளாக,
01.“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”,
02.“முப்பால் ஒழுகு இறைவடி சேர்வர் (அறம், பொருள், இன்பம்)”
03. “வாய்மையோடு இனியவை கூறல்” ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள், உயர்தர மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தனிப்பட்ட முறையிலோ குழுவாகவோ பங்கேற்கலாம்.
3 முதல் 5 நிமிடங்கள் வரையிலான தமிழ் குறும்படங்கள் MP4 வடிவில் தயாரிக்கப்பட்டு Google Drive அல்லது OneDrive இணைப்பின் மூலம் அனுப்பப்பட வேண்டும். போட்டிக்கான இறுதி நாள் 2026 ஜூன் 10 என அறிவிக்கப்பட்டுள்ளது.