📅
2026-05-10
திருக்குறள் மாநாடு – மட்டக்களப்பு, இலங்கை 2026
அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் ஏற்பாட்டில்,
“உலகளாவிய அறப்பாதைக்கு வள்ளுவம் காட்டும் வாழ்வியல்” எனும் கருப்பொருளில் மாபெரும் திருக்குறள் மாநாடு – 2026 நடைபெறவுள்ளது.
தமிழரின் பண்பாடு, அறவாழ்வு மற்றும் திருக்குறளின் உயரிய சிந்தனைகளை உலக அரங்கில் கொண்டு செல்லும் நோக்கில் இம்மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📌 மாநாட்டில் இடம்பெறும் நிகழ்வுகள்:
✒️ பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை போட்டி
🎬 பல்கலைக்கழக மற்றும் இளைஞர்களுக்கான குறும்பட போட்டி
📚 ஆசிரியர்களுக்கான அறிவு மதிப்பீடு
📖 பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான திருக்குறள் தொடர்பான நூல் மதிப்பீடு
🧠 ஆய்வரங்க நிகழ்வுகள்
📍 இடம்: சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம், கல்லடி, மட்டக்களப்பு
📅 திகதி: 28.06.2026
🕤 நேரம்: காலை 9.30 மணி முதல்
தமிழரின் அறவழி வாழ்வியலை உலகிற்கு எடுத்துச் செல்லும் இம்மாபெரும் மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.